வட அமெரிக்காவின் வடகோடியில் இருக்கும் கனடா மற்றும் அதன் தலைநகரான ஒட்டவாவைப் பற்றிய பொதுவான தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. கனடா தேசமானது, மொத்த எல்லையைப் பொருத்தவரையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய தேசமாகவும், நிலப்பரப்பைப் பொருத்தவரையில் உலகின் நான்காவது பெரிய தேசமாகவும் விளங்குகிறது. வேலை நிமித்தமாகவும், படிப்பதற்காகவும், அரசியல் இன்னல்களுக்கு அஞ்சியும் புலம் பெயர்ந்து உலகிலேயே தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடு கனடா. கனடாவை காண விரும்பி இங்கு வருபவர்களுக்கு இச்செய்திகள் ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.