காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது! ஆனால் காதல்?
எண்பதுகளில் பிறந்த நமது கதாநாயகன், அந்த காலத்துக்கே உரியக் கனவுகளுடனும் உத்வேகத்துடனும் வேகமாகப் பயணிக்க, வாழ்க்கையில் அவன் பெரிதாகச் சாதித்திருந்ததாலும், காதலைச் சொல்ல முடிவு செய்தபோது அவன் காதலியைக் காணவில்லை. முப்பதுகளின் நடுவில் நின்றிருந்த அவன், அம்மாவின் திருமண நெருக்கடிக்கு மத்தியில், அவளை மீண்டும் சந்தித்தான். இதற்கு இடையில், செட்டில் ஆகிவிட்டது தான் கல்யாணம் என்று காத்திருந்த அக்ஷயாவை அம்மாவுக்குப் பிடித்துவிட்டது.
சில நேரங்களில் நாம் தேடுவது முடிவுகளை அல்ல புதிய தொடக்கங்களையே...இது காதல் கதை அல்ல, காதலித்தவனின் கதை!