Share this book with your friends

karuvaachiyin kaadhal oviyamaaii / கருவாச்சியின் காதல் ஓவியமாய்

Author Name: M. Maria Helen Janoba (kaarkuzhali) | Format: Paperback | Genre : Poetry | Other Details

காதலின் ஆழமும் அதன் வலியும் அனுபவத்தால் வடித்தெடுக்க முடியும். காதல் ஒரு அற்புதம். புரிந்தவன் முத்தெடுப்பான். புரியாதவன் மூழ்குவான். காதல் ஒரு இனிய உணர்வு. என் இன்ப வலி இந்நூலாய்.அனுபவம் எழுத்தாய் புரண்டோட முதல் புத்தகம் வாசகர்களின் மனதிற்கு சொல் மருந்தாய் இருக்கும் என நம்புகிறேன். இந்நூலின் ஒவ்வோர் பக்கத்தாலும் நம் ஆழ்மனதை பதம் பார்த்து, எழுத்துலகம் கண்டெடுத்த விடியல்களுள் தான் தோன்றியாகி காலை ஞாயிறாய் குளு குளு திங்களாய் என்றும் வான் நிறைக்கும் வித்தைகளறிந்த மாயவியாய். இந்நூலால் எடுத்து வைத்த முதல் அடியை எல்லோர் மனத்திலும் நன்னெடியாக வீசவைப் பேன். தனித்துவமான கவிகளால் தனியே நின்றாலும் வாசகர் மனதில் என்றென்றும் ஒன்றென கலந்து வென்றுகாட்டும்  உங்கள் தோழியாய்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ம. மரிய ஹெலன் ஜெனோபா (கார்குழலி)

ம. மரிய ஹெலன் ஜெனோபா (கார்குழலி), ஆகஸ்ட் மாதம் ஏழாம் தியதி ராஜாவூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தன்னுடைய எட்டாம் வகுப்பு வரை ராஜாவூர் நடுநிலை பள்ளியிலும் ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்புக்  கல்வியை வளனார் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில் பயின்றார். இளநிலை, முதுகலை மற்றும் ஆங்கில தத்துவவியல் படிப்பை புனித திருச்சிலுவை கல்லூரி (தன்னாட்சி), நாகர்கோவில் பயின்றார். இளங்கலை கல்வியியல் படிப்பை எம் இ டி கல்வியியல் கல்லூரியிலும் பயின்றார். 

பேராசிரியராய் பணிபுரிய தகுதி தேர்வை மார்ச் 2018 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார்.தன்னுடைய முதலாமாண்டு பணி அனுபவத்தை புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அம்மாண்டிவிளையில் பெற்றார். தற்பொழுது புனித திருச்சிலுவை கல்லூரி (தன்னாட்சி), நாகர்கோவில் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய உணர்வுகளை எழுத்துகளில் சிறுவயதிலேயே எழுத தொடங்கியவர். சிறந்த கவிஞராக  வலம்வர காத்திருக்கிறார். தன்னுடைய முதல் புத்தகம் "கருவாச்சியின் காதல் ஓவியமாய்" என்பதில் காதலின் ஆழத்தையும் உணர்வுபூரவமான காதல் வலிகளையும் எழுத்தாய் செதுக்கியுள்ளார்.

காதலை, சொல்வதில் மட்டுமல்ல, சொல் கொண்டு செதுக்குவதிலும் பெண்கள் குறைந்தோரல்ல என்பதை நிறைவாக இறைத்து விட்டிருக்கி றேன். முனைவர் பட்டம் நோக்கி முனைகையிலும் காதல் கவிதைகளால் நனைக்க மறக்காதவர்.

Read More...

Achievements

+5 more
View All