இந்த புத்தகம் ஒரு மனப்பாட ஜெபங்களாக பயன்பட வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. இதில் வரும் அத்தனை ஜெபங்களுமே மாதிரி ஜெபங்கள் தான்.
சிறு வயதில் இவைகளை மனப்பாடம் செய்ய வையுங்கள். அதே நேரத்தில் உங்கள் வீட்டில், உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, எப்படி குறிப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக் கொடுங்கள். உங்கள் ஜெபங்கள் சிறுவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்படி, அவர்கள் முன்பாக ஜெபித்து பழகுங்கள். அவர்கள் முன்பாக வேதம் வாசித்துப் பழகுங்கள்.
இந்த 40 ஜெபங்களில், ஸ்தோத்திர ஜெபம், நன்றி ஜெபம், கிருபையின் ஜெபம், பரமண்டல ஜெபம் ஆகிய நான்கு ஜெபங்களையும் தினமும் காலையிலும் இரவிலும் ஜெபிக்க வையுங்கள்.
நீங்கள் ஒரு சில மாதங்கள் பழக்கினால் போதும், பிறகு அவர்களே இதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
பிள்ளைகளை வளர்க்க வேண்டிய விதத்தில் வளர்ப்பது நமது கடமை. சரியாக வளர்க்காமல், பிறகு வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. கர்த்தர் தாமே உங்களுக்கு தேவையான ஞானத்தை கொடுத்து நடத்துவாராக!
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners