ஸ்வாமி மைத்ரேயா அவர்கள் 1957 - ஆம் வருடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியாவில் பிறந்தவர். 1969 - ஆம் வருடம் அவரது 12 - ஆவது வயதில் ஒரு “நேரடியான மரண அனுபவ” (Near Death Experience) சம்பவத்தால், அகந்தையும், மனமும் அழிந்ததை தனக்குள்ளே உணர்ந்தார்.
அதன் பின், தனது வாழ்க்கை முழுவதும், அகந்தை மூலமாக உணர்ச்சிகளாக, எண்ணமயமாக வாழும், புத்தி, மனத்தின் இயக்கங்களை கூர்மையான “விசாரப் பார்வையால்” அறிந்து, தெளிந்து மனிதனையும் சேர்த்து, மொத்தப் பிரபஞ்சமும் “பொய்”யென்பதை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஆழ்ந்த உறக்கம் போன்றதொரு நிலை, “பேரிருப்பு, பேரறிவு, பேருணர்வு” மயமாக, “தான் தானாயிருத்தலே”. நமது சொரூப நிலை என்றுணர்ந்தார்.
அதை சத்சங்கங்கள் மூலமாகவும், செய்யுள்கள், மற்றும் பாடல்கள் மூலமாகவும் உபதேசித்துக் கொண்டிருக்கின்றார். இவைகளையெல்லாம் “Just be Satsangs”, free YouTube video channel - மூலமாகவும், இணையதளம் “www.justbesatsangs.com” - மூலமாகவும் அனைவரும் பார்க்கும் வண்ணம் பிரசுரித்துக் கொண்டும் உள்ளார்.
இந்த வகையில் இப்போது, “உள்-கட” என்ற “கடவுள் விஞ்ஞானத்தை”, “நான்” (உண்மை கற்பனைகளுக்கு எட்டா அதீதம்) என்ற தலைப்பில், ஒரு TV - mega serial போன்று, கதாபாத்திரங்களை கற்பனையாகப் புனைந்து, கதை வசனத்துடன், “தன்னை அறியத்” தாபமுற்றவர்களும் அனைத்து மனித சமுதாயமும் அவர்கள் அன்றாட வாழ்க்கையில், மனத்தின் கீழான குணங்களை வென்று, மனதைக் கடந்து பயனடையும் படியும், அமைத்துக் கொடுத்துள்ளார்.