சின்னஞ்சிறு கட்டுரைகள், கவிதைகள், அரசியல் பதிவுகள் சிறப்புரைகள், பேச்சுக்கள், முகநூல் பதிவுகள் என்று குறுகிய வட்டத்தில் மட்டுமே பயணித்து வந்த எனக்கு நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஊக்கமே இந்த ”நானே எழுதத் துவங்கினேன்“ புத்தகம்.
இது நாள் வரை நான் எழுதிய சிறு சிறு கட்டுரைகள் கவிதைகள் அரசியல் பதிவுகளின் திருத்தப்பட்ட தொகுப்பாகவும் இந்த புத்தகத்திற்காக எழுதிய கவிதை மற்றும் கட்டுரைகளையும் இணைத்துத் தொகுத்துள்ளேன்.
முதல் முயற்சி என்பதாலும் புத்தக அனுபவ குறைவும் நம்பிக்கைக் குறைவை தந்தாலும் நண்பர்களின் தொடர்ந்த ஊக்கம் இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க உதவி உள்ளது. எல்லாவற்றிற்கும் ஒரு துவக்கம் வேண்டும், திறமை இருந்தும் வெற்றி பெறாத பலரின் தோல்விக்கு துவங்காததும் இடை நிற்றலுமே காரணம். இந்த புத்தகம் முயற்சியின் முதல் துவக்கமாக வெற்றியின் முதல் படியாக துவங்குகிறேன்.
புத்தகம் எழுதும் முதல் படியாகவே இதைப் பார்க்கிறேன் அடுத்தடுத்த புத்தகங்களை எழுதும் தன்னம்பிக்கையையும் இந்த புத்தகம் தந்துள்ளது என்றால் மிகை ஆகாது. இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதிக் கொண்டிருக்கும் போதே அடுத்த இரண்டு புத்தகங்களை எழுதவும் தொகுக்கவும் துவங்கி உள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தருகிறது.