புரட்சியாளர்களின் புகழ் நெருப்பால் எரிக்கப்பட இயலாமலும் நிலத்தால் புதைபடாமலும் காலம் உள்ள வரையில் நிலைத்து நிற்கும். அத்தகைய மாவீரர்களில் ஒருவரான வங்கத்து சிங்கம், நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு கணம் நாம் இந்தப் புத்தகத்தின் வாயிலாக புரட்டிப் பார்ப்போம். எழுதியவை கொஞ்சம் தான் ஆனால் ‘சுதந்திர இந்தியா’ எனும் அவரது இலட்சிய இலக்கிற்காக அவர் ஆற்றிய சேவைகளை குறித்து உரையாட நம் பாதி ஆயுள் கடந்துவிடும். இந்திய இளைஞர்களை தட்டி எழுப்பி தைரியம் அளித்து அவர்களின் ஆயுத கையாளுகையை உலகறியச் செய்த ஒப்பற்ற வீரனின் மறைக்கப்பட்ட வரலாறு. இப்புத்தகம் கண்டிப்பாக உங்களைக் கவரும் என நம்புகிறேன். நன்றி.