கார்த்திக் என்ற வனஉயிரினப் புகைப்படவியலாளர், தான் ஒரே ஒரு முறை கண்டு காதல் வயப்பட்ட வள்ளி என்னும் பெண்ணை நினைத்து 10 வருடங்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். எதேச்சையாக பெங்களூரில் அவர் சந்திக்கும் பவித்ரா என்னும் கன்னட நடிகை அவர் மேல் காதல் வயப்படுகிறாள்.
மற்றொரு புறம் ஜெயா என்னும் மாவட்ட ஆட்சியர் தன் பெண் குழந்தையுடன் திருநெல்வேலியில் தனியே வாழ்ந்து வருகிறாள். அவள் காரியதரிசி ரம்யாவுக்கு தனித்திருக்கும் ஜெயாவின் வாழ்க்கையே ஒரு புதிராக படுகிறது.
கார்த்திக்கும் ஜெயாவுக்கும் என்ன சம்பந்தம்? பவித்ராவின் காதல் வென்றதா? கார்த்திக் தான் தேடித் திரிந்த பெண்ணைக் கண்டுக்கொண்டானா? இப்படி பலவித கேள்விகளுக்கு பரபரப்பான விதத்தில் சுவாரஸ்யம் குறையாத பதில் தான் இந்த கதை.
கதையினுடே கார்த்திக் மற்றும் அவனது நண்பன் ரமணி இருவரும் புலியை புகைப்படம் எடுக்கக் காட்டுக்குள் தனியாக சென்று மாட்டிக்கொண்டு படும் அனுபவங்களும் இணைக்கதையாக சொல்லப்பட்டுள்ளது. காட்டைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும், ஒரு சில நுணுக்கமான புகைப்பட கலையைப் பற்றியும் ஆங்காங்கே பல விடயங்கள் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு காடும், காதலும் பிடிக்குமென்றால் இந்த கதையும் பிடிக்கும்.