சங்க காலமோ தற்காலமோ காதல் என்ற உணர்ச்சி இவ்வுலகம் அழிந்தாலும் அழியப் போவதில்லை. காதல் கல்லாதவர்களைக் கூட கவிஞர்களாக்குமாம். கோழையைக் கூட தளபதியாக்குமாம். உண்மைதான் போல. சினேகம் என்பது யாருக்குத்தான் இருக்காது. ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு படைத்த மானுடப் பிறவிகள் வரை தவிர்க்க இயலா ஒன்றுதான். இருப்பினும் எக்காலத்திலும் காதல் அமைவதெல்லாம் விதிவிட்ட வழிதான். சிலருக்கு ஆயுள் வரை தொடரும் காதல் சிலருக்கு காலாண்டு மட்டுமே நிலைக்கும். காதலர்கள் பிரிந்தாலும் காதல் அழியுமா என்ன? இந்நாவலில் போர்க்களத்தில் காதலைப் புகுத்தியுள்ளேன். இந்நாவலில் வரும் சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் என் கற்பனைக்கு உட்பட்டவையே. ஒரு பேரரசின் வீரம், நிர்வாகத் திறன், போர் யுக்தி, எதிர் நாட்டினரின் வஞ்சம், பகை, பெண்ணியம், சகோதர பாசம், துரோகம், தேசப் பற்று, காதல் மற்றும் கடமை என பல கோணங்களில் பயணிக்கிறது இக்கதை. இக்கதை கட்டாயம் தங்களை மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறேன்.