இந்நுாலிலுள்ள ஒவ்வொரு கவிதையும் ஆழமாய் படித்தால், படிக்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் பொதிகிறது. எழுத்துகள் எழுதுபவரின் திறமையை மாத்திரம் வெளிக் கொண்டு வருவதாக இருக்கக்கூடாது. நிறைய எழுத்தாளர்கள் தங்கள் புலமையைக் காட்டும் நோக்கில், படிப்போருக்கு புரியாத வாசகங்களைக் கையாண்டு அலுப்பை ஏற்படுத்தி விடுவார்கள்! இந்நுாலாசிரியர் கவிஞர். பெ.பெரியார்மன்னன், முற்றாக அதிலிருந்து மாறுபடுகிறார்! கவிதைகளை இலக்கிய நயத்தோடு மாத்திரம் இவர் படைக்கவில்லை, எளிய நடையில் இனிப்பு சொட்டும் இன்பத்தமிழில் சுறுசுறுப்பான வாசிப்பாக அமைத்திருக்கிறார். இந்த பெரியாரின் கவிதைகள் நுாலில், 43 பல்துறை வித்தகர்களையும், பல துறைகளையும் பற்றியது! மழலைக்கவியிலேயே மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தை வைப்பவர், இந்த வித்தகக் கவிதைகளிலே எத்தனை வித்தையை காட்டியிருக்கிறார் என்பதை சுவைத்துப்பாருங்கள்.