மஞ்சள் காமாலை
நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முள்ளங்கி ஜூசை உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் இந்நோயின் தீவிரதன்மை குறையும்.
சிறுநீரக கற்கள்
தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. முள்ளங்கி ஜூஸ் தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.
இதயம்
உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு,
இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முள்ளங்கியை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners