அணுத் திரள்தான் எங்கெங்கும் உள்ள - இறை | புள்ளியாக இலங்குவது - இறைநிலை | தான் மாறுபடாமல் நிற்பது இறைகுணம் | தன்னைச் சுற்றி மாறுபாடுகளை உருவாக்குவது-இறைச் செயல் | தனது நீட்சியை ஒலி, ஒளியாக உருமாற்றுவது - இறைப்பண்பு | ஒலி, ஒளி, கூடுதலாக ... காலம், வெளி, கலை - போன்றவற்றை பிணைத்துக் குடுவைகளை தோன்றச் செய்வது - இறையின் போக்கு | குடுவையின் பண்புகளை முழுமையாக வெளிப்படுத்த அனுமதிப்பது - இறை ஏற்பாடு | இதன் தொடர்ச்சியாக, தன்னை மறைத்து குடுவையை வெளிப்படுத்தும் நல்லதொரு இறை இலக்கணத்தைச் சற்று நெகிழச் செய்து ... குடுவையை மறைத்து, இறையின் தன்மையை வெளிப்படச்
செய்வதே வித்தை ! (குடுவை = உடம்பு)
மேலான தமிழ் சித்தர்கள் அனைவர், குறிப்பாக, தெய்வீக ஞானவான்கள் முறையே ... திருமூலர், அவ்வையார், திருவள்ளுவர், அகஸ்தியர், புலஸ்தியர், பதஞ்சலியார் மற்றும் வெளிநாட்டு, பிளேடோவிலிருந்து அரிஸ்டாடில், புளோட்டினஸிலிருந்துஅலெக்சாண்டர் கால புனிதர்கள், நான்காம் நூற்றாண்டின் டயனிஸியஸ், மேதை இங்கினா, மருத்துவ, தத்துவ, ஆன்மீக மேதை, 16-ஆம் நூற்றாண்டின் பேரஸல்சஸ், பிரெஞ்சு புரட்சி காலத்திய புனித மார்டின், அமெரிக்காவின் எமெர்ஸன்,ஜெர்மனியின் ஃபிட்சர், அயர்லாண்டின் பெர்க்லே, மற்றும் புனிதர் இயேசு கிருஸ்து, பிதாகரஸ், டிரிஸ்மெஜிஸ்டஸ் ... ஆகியோர், குழுக்களாக, சமூகமாக... பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த உன்னத பயிற்சிமுறையானது (!) ... இப்புத்தகத்தில் விரவி இருக்கிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners