Share this book with your friends

Thisai Udaikkum Sol / திசையுடைக்கும் சொல் Transalation Poems

Author Name: Bo.manivannan, R.Manimegalai | Format: Paperback | Genre : Poetry | Other Details

கேரளத்தில் மலையாள இலக்கியப் படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருதை வென்ற கவிஞர். குரீப்புழா ஸ்ரீகுமார் அவர்களின் கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பே ' திசையுடைக்கும் சொல்' என்னும் நூலாகும். கவிஞர் குரீப்புழா ஸ்ரீகுமார் அவர்களின் நாற்பது கவிதைகள் மலையாள மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. போ.மணிவண்ணன் மற்றும் இரா.மணிமேகலை இருவரும் இணைந்து இந்த மொழிபெயர்ப்பு பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

போ.மணிவண்ணன், R.Manimegalai

1.போ.மணிவண்ணன் 

இன்றைய தமிழ்ச் சூழலில் தற்கால இலக்கிய ஆளுமைகளில் தனித்தன்மை வாய்ந்த படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர் இவர். போ.மணிவண்ணன் என்ற இயற்பெயரில் இதுவரையில் பதினான்கு நூல்களை எழுதியுள்ளார். அடிப்படையில் அரசு கல்லூரி்யில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் கவிதை, நாவல், திறனாய்வு, மீட்டுருவாக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு முதலான தளங்களில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கும்  இவர் இதுவரையில் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.இவரது கவிதைகள் பல  கல்வி நிறுவனங்களின்  பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கேரள அரசின் பாடத்திட்டத்தில் இவரது கவிதைகள் வைக்கப்பட்டுள்ளன. கலை இலக்கிய பங்களிப்பிற்காக பல விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய  ' வெண் தரிசு நிலம் ' என்ற நாவல். 2022 ஆம் ஆண்டிற்கான  ' இண்டியா புக் ஆஃப் ரிக்கார்ட் ' விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்  தொடர்ந்து சூழலியலுக்காக தன் படைப்பின் மூலம் தீவிரமாக  குரல்கொடுத்து வருகிறார்.மொத்தத்தில் இவர் ஒரு பன்முகப் படைப்பாளி.
 
 2.முனைவர் இரா.மணிமேகலை 

முனைவர் இரா.மணிமேகலை தமிழ் உதவிப் பேராசிரியராகக் கோயம்புத்தூர் கொங்கு நாடு கலைஅறிவியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். பக்தி இலக்கியத்துடன் தென்னிந்திய சைவசித்தாந்த மெய்யியலை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு முனைவர்  பட்டம் பெற்றுள்ளார். தமிழும் இசையும் கலந்து மாணாக்கர்களுக்கு வகுப்புகளைக் கற்பித்து வருகிறார்.
பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் உதவியுடன் ஆய்வுத்திட்டங்களை நிறைவேற்றியுள்ள இவர் பழந்தமிழ் நூல்கள் முதலாக நவீன இலக்கியம் வரையான படைப்புகளை  வாசிப்பதில் அக்கறை உள்ளவர். இதுவரை நான்கு உரை நூல்கள் இயற்றியுள்ளார். ஓரிரு கல்லூரிகளில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளார். பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அறக்கட்டளை வழங்கிய “ பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் நூற்றாண்டு நினைவு நல்லாசிரியர் விருது ” மற்றும்,பனமா பல்கலைக்கழகம் இவது திருப்பாவை உரைக்கு வழங்கிய  "மெய்யியலாளர்”விருதுகளைப் பெற்றுள்ளார்.தலந்தோறும் சென்று வணங்கி தமிழிசைப் பாடல்களைப் பாடவும் வரலாற்று மூலங்களைத் தேடவும் ஆர்வம் கொண்டவர்.
 
 
 
 
ReplyForward
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read More...

Achievements

+6 more
View All