"உன் விழியில் என் காதல் " எனது இரண்டாம் கதை. முற்றிலும் கற்பனையான கதை. காதலை புதிய கோணத்தில் எழுதி இருக்கிறேன். நாயகனுக்கு நாயகி முகம் தெரியும் ஆனால் காதலை சொல்லும் நிலையில் இல்லை. நாயகிக்கு நாயகனின் முகம் தெரியாது, அவனின் விழி மட்டுமே தெரியும். காதல் கொண்ட காதலர்கள் இருவரும் காதல் சொல்லும் முன்பே பிரிந்து விடுகின்றனர், நம்பிக்கை ஒன்றை மட்டுமே துணையாக கொண்ட காதலர்கள். இறுதியில் இணைத்தார்களா? இல்லையா? என்பதே கதை.
வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு மணிச்சட்ட ஆசிரியை, கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். நன்றி.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி
கௌரி முத்துகிருஷ்ணன்.