உணவே மருந்து மனிதா திருந்து என்னும் இந்தப் புத்தகத்தை ரா சுந்தரமூர்த்தி என்னும் நான் எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பல்வேறு கவர்ச்சிகரமான கலப்படம் சார்ந்த பொருட்கள் அதனால் நமக்கு ஏற்படும் பின் விளைவுகள் பக்க விளைவுகள் மற்றும் அது கொண்டு போய் சேர்க்கும் மோசமான எல்லைகளை அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு இந்த புத்தகம் ஆகும். இந்தப் புத்தகத்தில் யாரையும் எதையும் தாக்கியோ புண்படுத்திய நான் எழுதவில்லை. நமது தமிழ் மருத்துவத்தின் சிறப்பை உணர்த்த கூடிய அன்றாட உணவில் நாம் பயன்படுத்த வேண்டிய முக்கியமான ஒரு சில பொருட்களான பெருங்காயம் சோம்பு , சீரகம், மிளகு தானிய வகைகள், பருப்பு வகைகள், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு போன்றவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் அது நம் உடலுக்குத் தரும் பெரிய மருத்துவ பலன்களை பற்றி இந்த புத்தகத்தில் விரிவாக எடுத்து வைத்திருக்கிறேன்