மனிதநேயத்திற்கும், சமூக சேவைக்கும், சாதனைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நல்ல மனிதர்கள் சமூகத்தில் நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் இருப்பிடம் தெரியாமல் அமைதியாக வாழ்ந்து விடுகின்றனர். மகத்தான பல மனிதர்கள், தன்னை எவ்விதத்திலும் பிரபலப்படுத்திக்கொள்ள விரும்பாமலேயே மறைந்தும் விடுகின்றனர். தமிழகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த போற்றுதலுக்குறிய மனிதர்கள் சிலரை பற்றிய கட்டுரைகளை கொண்டதே நுால். எனவே தான் இந்நுாலுக்கு விந்தை மனிதர்கள் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.. வருங்காலத்தில் சமூகத்தை அறநெறியோடு காத்திட, வழிநடத்திட, தொண்டாற்றிட, பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை போற்றிட, இந்நுாலில் இடம் பெற்றுள்ள விந்தை மனிதர்களை பற்றி கட்டுரைகள் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கத்தை உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதும், படிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், மற்றவர்களுக்கு பரிசாக வழங்குவதற்கும் மிகச்சிறந்த நுாலென, வாசகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners