பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்கள், தன்னலமற்று சேவையாற்றும் விந்தை மனிதர்கள் குறித்து மற்றவர்களும் அறிந்து கொள்வதற்கும், தற்கால மாணவர்களும், இளைஞர்களும், இவர்களைப்போல நம்மாலும் சாதிக்க முடியுமென்ற தன்னம்பிக்கை பெறுவதற்கும் வழிவகுக்கும் நோக்கில், சாதனையாளர்கள், சமூக சேவகர்கள் குறித்த கட்டுரைகளை தொகுத்து ‘விந்தை மனிதர்கள்’ என்ற பெயரிலேயே நோசன் பிரஸ் இணைய பதிப்பகத்தின் வாயிலாக 2021ல் நுால் வெளியிடப்பட்டது. இந்நுால் சாதனை பெட்டகமாக, காலச்சுவடாக பதிந்ததோடு, பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலையும், வரவேற்பையும் பெற்றது. இதனைத்தொடர்ந்து, மேலும் பல நல்லோர்கள், சாதனையாளர்கள், சமூகப்பற்றாளர்கள், கலைஞர்கள் பலரைப் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து, ‘விந்தை மனிதர்கள்–2’ என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியாக இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நுாலில் இடம்பெற்றுள்ள பற்றிய கட்டுரைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பாமர மக்கள் முதல் கல்வியாளர்கள் வரை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் தாக்கத்தையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம்.