Share this book with your friends

50KG TAJMAHAL - ABHAAYA NOYAALI ( 2 NOVELS COMBO ) / 50கேஜி தாஜ்மஹால் - அபாய நோயாளி

Author Name: Rajesh Kumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

50கேஜி தாஜ்மகால்

 

புகழின் உச்சியில் இருக்கும் இளம் பரதநாட்டிய தாரகை ஜோதிகாவுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு ,அமையப் போகும் அவளின் திருமண வாழ்க்கைக்கு ஒரு பூதாகரமான பிரச்சனையை அழைத்துக்கொண்டு வருகிறது. இதனால் அவள் நிம்மதி இழக்கிறாள்.இந்நிலையில் காத்திருக்கும் விபரீதம் அறியாமல் ஜோதிகா ஒரு கலாச்சார நிகழ்விற்காக கலைத்துறை அமைச்சரை காண ஆக்ரா செல்கிறாள்.அங்கு முன்பிருந்த பிரச்சனையுடன் இன்னொரு விபரீதமும் சேர்கிறது. இதனிடையே ஜோதிகாவைத் தேடி அவளைத் திருமணம் செய்யப் போகும் ராகவ்வும் ஆக்ரா வருகிறான். அங்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகள் ஜோதிகாவையும் ராகவ்வையும் அதிர வைக்கின்றன.

 

அபாய நோயாளி 

 

இரண்டு கிளை கொண்ட கதை 

 

முதல் கதை 

 

ஷ்ரேயாவை மணம்முடிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் பரணியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறது அவன் குடும்பமும் ஷ்ரேயா குடும்பமும். ஆனால், விமானம் தரை இறங்கும் முன்னேமே பரணிப் பற்றிய ஒரு அதிர்ச்சி செய்தியால் நிலைகுலைகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பது புரியாமல் தவிக்கிறார்கள்.தீர்வுக்காக மருத்துவர்களும், காவல் துறை அதிகாரிகளும் களம் இறங்குகிறார்கள். ஆனால், நேரம் செல்ல செல்ல பிரச்சனைகள் மேலும் கிளைவிட சூழல் இன்னுமும் குழப்பமாக மாறுகிறது. 

 

இரண்டாவது கதை 

 

உடல்நிலை குன்றிய மனைவி மனோரஞ்சிதத்திற்கு கணவன் சுபாஷ் உறுதுணையாக இருக்கிறான். சுபாஷ் வெளியூர் செல்கையில் தன்னை கவனித்துக் கொள்வதற்காக திலகா என்ற பெண்ணை வேலைக்கு எடுக்கிறாள் மனோரஞ்சிதம். அங்கிருந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.ஏன்.. எப்படி என தெரிவதற்குள் ஒரு பெரும் விபரீதம் நடக்கிறது. காவல்துறை விசாரணையை முடுக்குகிறது.யார் குற்றவாளி என அனைத்து திசைகளிலும் சாட்டையைச் சொடுக்குகிறது.

 

Read More...
Paperback
Paperback 225

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ் குமார்

ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல்  கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, “சித்தர்களா! பித்தர்களா!!”  முக்கியமானவை.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்,  அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின்  முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற  முதல் தொடர்கதை வெளியானது.

1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில்  41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்களை  பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.எச்டி. படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.

இவருடைய  நாவல்கள் பல திரைப்படங்களாகவும்  தொலைக்காட்சித்   தொடர்களாகவும்  தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி  மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. எழுத்துலகில் இவர் ஆற்றிய  சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

 

Read More...

Achievements

+7 more
View All