Share this book with your friends

AGAVARIGAL / அகவரிகள் Vaazhkai Thisaikaatti / வாழ்க்கை திசைகாட்டி

Author Name: Subramanya Selva | Format: Paperback | Genre : Self-Help | Other Details

ஒருவரின் வாழ்க்கையில் பல மேடுகளும் பள்ளங்களும் வருவது இயற்கை. ஆனால் அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது நமது முடிவு. அந்த முடிவுகள் உங்கள் வாழ்க்கையின் பாதையை, ஏன் உயரத்தையும் நிர்ணயிக்கும்.  எவ்வாறு அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் எனபதை செல்வா இந்த நூல் வழியாக  கதைகள் மூலமும், தனது அனுபவங்கள் மூலமும் அழகு தமிழில் நம்முன் வைத்துள்ளார்.  படிப்பதும், கடைப்பிடிப்பதும் நமது கடமை.

Ramesh Dorairaj | Bangalore - India

(Author: Games Customers Play)

நீண்ட இரவுகளின் முடிவிலும், ஒவ்வொரு காலையிலும் அன்று கடக்க வேண்டிய அன்றாட சோர்வைத் தரும் பணிகள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், எதிர்பாராமல் வரவிருக்கும் சுனாமிகள் எல்லாம் செல்வாவின் ஊக்கம் தரும் ஆக்கங்களுடன் கரைந்துவிடுகின்றன. இப்போதெல்லாம் அவரின் வாசகங்களுடன்தான் ஒவ்வொரு காலையும் புலர்கிறது. உங்கள் சிந்தனைகளும் ஆக்கங்களும் தொடரட்டும்.   வாழ்க வளமுடன்!

T. Kumararuban | London - United Kingdom

 

Read More...
Paperback
Paperback 185

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுப்ரமண்ய செல்வா

வெற்றிகரமான தொழில் முனைவர், வாழ்வியல் பயிற்சியாளர், ஊக்க உரையாளர்/எழுத்தாளர், வலைப்பதிவர், வலையொளி பதிவர் (YouTuber) என பன்முக ஆளுமை கொண்டவர் சுப்ரமண்ய செல்வா.  தனது எழுத்து மற்றும் உரைகள் மூலம் சகமனிதர்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்னும் திடநம்பிக்கையில் செயல்பட்டு வருபவர்.அகத்தூண்டுதல் அளிக்கும் தனது சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் கட்டுரைகள் மூலம் தன்னம்பிக்கை விதைகளை விதைத்து வருபவர்.  இதற்கு முன் வெளிவந்த அவருடைய 'தொடுதூரத்தில் விடிவானம்' கவிதைத் தொகுதியில்கூட அதிகம் தன்னூக்கக் கவிதைகளே இடம்பெற்றுள்ளன.

Read More...

Achievements

+2 more
View All