Share this book with your friends

Ainthaam Pirai - Aduththa Ilakku / ஐந்தாம் பிறை - அடுத்த இலக்கு 2 NOVELS COMBO / 2 நாவல்கள் தொகுப்பு

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஐந்தாம் பிறை

பொதுவாய் அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் நிலா தன்னுடைய முகத்தை ஒரு மெல்லிய வளைந்த கோடாய் மேற்குத் திசையில் காட்டும் . அதற்கு மூன்றாம் பிறை என்று பெயரிட்டு அதைப் பார்ப்பதையே அதிர்ஷ்ட நாளாய்க் கருதுகிறோம் . இந்து மதம் மட்டுமல்ல , மற்ற மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன . ஆனால் இந்த நாவலில் நிலவின் ஐந்தாம் பிறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , விபரீதமான நிகழ்வுகள் நடக்கின்றன . கதையில் எத்தனையோ கதாபாத் திரங்கள் உலா வந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் இந்த ஐந்தாம் பிறைதான் . எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா .. ? நாவலைப் படியுங்கள் ! ஆச்சர்யப்படுங்கள் !!

அடுத்த இலக்கு

இந்த உலகில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அது எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் சரி ... பணம் , பெண் , பகை - இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும் . ஆனால் இந்த ‘ அடுத்த இலக்கு ’ நாவலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மேற்சொன்ன மூன்றும் அல்லாமல் வேறு ஒரு காரணம் . அதுவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாக இருப்பதுதான் வியப்பான ஒரு விஷயம் . கதையின் முடிவு உங்களுக்கு அதிர்ச்சி யைக் கொடுத்தாலும் , அது இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

 

Read More...
Paperback
Paperback 260

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல்  கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, “சித்தர்களா! பித்தர்களா!!”  முக்கியமானவை.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்,  அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின்  முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற  முதல் தொடர்கதை வெளியானது.

1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில்  41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்களை  பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.எச்டி. படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.

இவருடைய  நாவல்கள் பல திரைப்படங்களாகவும்  தொலைக்காட்சித்   தொடர்களாகவும்  தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி  மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. எழுத்துலகில் இவர் ஆற்றிய  சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

Read More...

Achievements

+7 more
View All