You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநிறைய பேருக்கு நிறைய கனவுகள் வரும். ஆனா சில கனவுகள் திரும்ப திரும்ப வருதா? அப்படி வந்தா ஏன் அந்த பர்டிகுலர் கனவு வருதுனு யோசித்திருக்கிங்களா?
சிலருக்கு எப்ப பாரு சுத்தி தண்ணியா இருக்கற மாதிரி கனவு வரும். சிலருக்கு எப்ப பாரு பாம்பு கனவா வரும். சிலருக்கு எப்பவும் யாருக்காவது திருமணம் நடைப்பெறுவது போலவோ இல்லை யாரோட வீட்ல பிணத்தை சுற்றி அழுற மாதிரி கனவு வரலாம். இதெல்லாம் சிலர் சொல்லி இப்படி வந்தாலே இப்படி நடக்கும் என்று புலம்புவாங்க. நோட் பண்ணிருக்கிங்களா.
அப்படிப்பட்ட கனவுகளில் ஒன்று ஆருஷிக்கு வந்திருக்கு. கனவுகள் எப்பவும் சும்மா வந்துட்டு போகாது. அது ஏதேனும் காரணம் இருக்கணும்.
ஆருஷியோட கனவும் அந்த கனவு எதற்கு வருது என்ன செய்து அந்த கனவை வெறுத்து அதுல இருந்து வர்றாளா என்பது தான் கதை. அதை சரியா கொடுத்தேனானு வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்லணும்.
இது கொஞ்சம் காதல் மர்மம் சமூகம் உள்ளடங்கி கதையா எழுதி உள்ளேன்.
பிரவீணா தங்கராஜ்
*அவளைத் தேடி* என்ற நாவலின் எழுத்தாளராக அடையாளப்படுத்தி கொள்ளும் நான் சென்னையில் வசிப்பவள்.
நாம் நம் வாழ்வில் பொதுவெளியில், விழாக்களில், நல்லது கெட்டது நிகழ்ச்சியில் என்று பல அனுபவத்தினை உள்வாங்கி, வாழ்வின் பிரச்சனைகளையும் தீர்வாக மாற்றி, நாயகன் நாயகியாய் உருவகித்து பிரச்சனையை அவர்களுக்குள் ஏற்றி, அதற்கு தீர்வும் கொடுத்து நாமும் ஒரு பிரம்மனாய் கதாபாத்திரத்தின் மீது தலையெழுத்தாக எழுதி அவர்களை கதை மாந்தர்களாக நடமாட வைப்பதே ஒரு அலாதி மகிழ்ச்சி.
அப்படிப்பட்ட அலாதியை விரும்பி நாவல்களை படைக்க ஆரம்பித்து இதோ வாசகர்களான உங்கள் முன் நாவல் எழுத்தாளராக மாறியுள்ளேன். எனது கதைகளின் பட்டியலும், சுட்டிகளும் அறிந்திட Praveenathangaraj.blogspot.com என்ற தளத்தில் காணலாம். மேலும் ராணி முத்து நாளிதழில் பிரம்மனின் கிறுக்கல்கள் என்ற நாவலும் ஜூன் 16, 2022 வெளியாகி உலகத்திற்கு என்னை அடையாளப்படுத்தியது.
The items in your Cart will be deleted, click ok to proceed.