"பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது .... அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும் வளரும்போது சகல பூண்டுகளிலும் பெரிதாகி ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் " என்றார் இயேசு.
அதன்படி திருநெல்வேலி அத்தியக்ஷாதீன திருச்சபையின் ஆரம்பம் மிகச் சிறியது; அதன் வளர்ச்சியோ மிகப் பெரியது. 1778-ம் ஆண்டில் 14 பேரடங்கிய திருச்சபை 1960-ம் ஆண்டில் 9920 (80 குறைய 1 1/2 லக்ஷம்) கிறிஸ்தவர்களடங்கிய திருச்சபையாக வளர்ந்திருக்கின்றது. இது ஆண்டவரின