You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதமிழகத்தின் சேலம் வட்டாரக் கிறிஸ்தவ வரலாற்றை உங்கள் கரங்களில் தவழும் நூல் வாயிலாக திரு. ஜே. பர்னபாஸ் அவர்கள் வெளிக்கொணர்ந்திருப்பது பெரும்பாராட்டுக்குரியது என்பது மிகையன்று. ஆங்கில ஆவணக்காப்பேடுகளில் இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள் அநேகம் இருப்பினும், அவைகள் பாமரக் கிறிஸ்தவர்களுக்கு சென்று அடைவதில் பெரிய இடைவெளி இருப்பதை யாரும் மறுத்தல் இயலாது. இந்த குறைவினை திரு. பர்னபாஸ் அவர்கள் பெருமளவுக்கு நீக்கியுள்ளார் என்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.
1971 - ஆம் ஆண்டு முதல், தென்னிந்திய திருச்சபையின் ஆயராக ஏற்காட்டில் நான் பொறுப்பேற்றது முதற்கொண்டு என்னுடைய கிறிஸ்தவ வரலாற்று பயணம் துவங்குகிறது. பின்னாண்டுகளில் திரு. பர்னபாஸ் அவர்களின் முன்னோர்களிடையே சேலம் அஸ்தம்பட்டி ஆலயத்தில் பணியாற்றிய நாட்கள் முதற்கொண்டு, திரு. பர்னபாஸ் அவர்களை அவர்தம் பள்ளிப் பருவம் தொட்டு அறிந்துள்ளேன். கிறிஸ்தவ வரலாற்றில் ஊக்கம் கொண்டு அதனை நிறைவான முறையில் பேணி வரும் அவருடைய அணுகுமுறைகளுக்கும், கிறிஸ்தவ வரலாற்று வரைவியலில் அவருடைய சீஷத்துவமான ஈடுபாட்டுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
திரு. ஜே. பர்னபாஸ்
திரு.ஜே.பர்னபாஸ், M.Sc. (Geology), சேலம் GTPகிரானைட்ஸ் (U-1) நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு ஆய்வாளர்(ஓய்வு). சேலம் வரலாற்றுக்கு குரல் கொடுக்கும் சேலம் வரலாற்றுச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளராக செயல்பட்டுவரும் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து சேலத்தில் தினகரன், தினமணி, தினத்தந்தி, காலைக் கதிர், The Hindu, The New Indian Express, போன்ற நாளிதழ்களிலும், தமிழ் முரசு, மாலை முரசு, மாலை மலர், போன்ற மாலை இதழ்களிலும் "சேலம் வரலாறு" பற்றிய செய்திகளை தொடர்ந்து வழங்கிவருகிறார்.
உன்னத சிறகுகள், அருளமுது போன்ற காலாண்டிதழ்களிலும், புதிய தரிசனம் போன்ற மாதம் இருமுறை இதழ்களிலும், இம்மானுவேல் நியூஸ் லெட்டர், ஜீவ தேவன், விண்மணி, மற்றும் திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் "கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள்" என்ற மாதாந்திர இதழிலும் "சேலம் கிறிஸ்தவ வரலாறு" பற்றி இவர் தொடர்ந்து எழுதிவருகிறார்.
இவர் எழுதிய சேலம் தந்த இந்திய சுதந்திரப் போராட்டவீரர் "சேலத்துச் செம்மல் K.T.பால்" வாழ்க்கை வரலாற்று நூல் கடந்த 2014 ஆம் ஆண்டு சேலம் YMCA அமைப்பால் வெளியிடப்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சேலம் பழைய ஆங்கிலேயர் கல்லறைத் தோட்டத்தில் பாழடைந்து கிடந்த வரலாற்றுக் கல்ல றைகளைப் பழுதுபார்த்து நிலைநிறுத்திய திருப்பணிகள் பற்றிய இவரது திட்ட அறிக்கையை தெற்கு ஆசிய பிரிட்டீஷார் கல்லறைகள் பாதுகாப்பு அமைப்பு (British Association for Cemeteries in South Asia - BACSA, London) "The Old Anglican Cemetery Salem, Tamil Nadu" என்ற பெயரில் (Edited by Denise Love, BACSA, London, 2014) புத்தகமாக வெளியிட்டது. இந்த புத்தகமும், இவரது திட்ட அறிக்கையும், இங்கிலாந்து தேசத்தின் பிரதான நூலகங்களில் வரலாற்று ஆவணங்களாக வைக்கப்பட்டுள்ளது. "சேலம் வரலாற்றின் அடையாளங்கள்" என்ற ஆசிரியரின் சேலம் வரலாற்று ஆய்வு நூல் அது விரைவில் வெளியிடப்பட உள்ளது.
The items in your Cart will be deleted, click ok to proceed.