Share this book with your friends

Kamalamba Navavarna Keerthanaigal / கமலாம்பா நவாவர்ண கீர்த்தனைகள் Sri Muthuswami Deekshitarin Padaipugalil Oru Pokkisham / ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் படைப்புகளில் ஒரு பொக்கிஷம்

Author Name: Nallan C Mohan | Format: Paperback | Genre : Music & Entertainment | Other Details

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவாவர்ண கீர்த்தனைகள், அவர் நமக்கு அருளிய பொக்கிஷம். அந்தந்த சக்ரத்திற்கு தகுந்த ராகங்களை தேர்ந்த்தெடுத்த  விதம், அருமையிலும் அருமை. அவர் படிப்படியாக கீழ் மட்டத்திலிருந்து நடு பிந்து வரையிலும், நன்றாக பாட்டை படைத்துள்ளார். ஓவ்வொரு சக்கிரத்தின் சிறப்பை எவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்! ஓவ்வொரு  பாட்டு  பாடும் போது, அந்த அம்மனே அந்த சக்கிரத்தில் வந்து உட்காருவது போல் உணர்கின்றோம். கடைசி மந்திர கீர்த்தனையில், சக்ரத்திலுள்ள எல்லா மந்திரங்களும்  அதில் அடங்கும்.

இதுவரை இத்தகைய கீர்த்தனைகளை தெளிவான குறியீட்டில் (நொட்டேஷன்) இல்லாததால் மாணவர்கள் முறையாக கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால் இந்த புத்தகம் வழியாக தெளிவான குறியீட்டில் (நொட்டேஷன்), இந்த பாடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், முதன்முறையாக முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வரலாற்றின் சில முக்கிய சம்பவங்களை, ஓவியங்களாக வரைந்து கொண்டுவந்துள்ளோம்.

இந்த புத்தகம் எல்லோருக்கும் பயன்படும் விதமாக மூன்று பாஷைகளில்  வெளியிட்டுள்ளோம்.( (தமிழ் தெலுங்கு  ஆங்கிலம் )

Read More...
Paperback
Paperback 620

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நல்லான் சி மோகன்

நல்லான் சி மோகன் ஒரு உயர்ந்த வைணிக பரம்பரையை சேர்ந்தவர். அவர் தனது தந்தையான திரு. என். சி.  பார்த்தசாரதியிடமிருந்து  சிறிய வயதிலேயே வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தனது எட்டாவது வயதிலேயே கச்சேரி செய்ய தொடங்கினார். தனது பள்ளியிலும், கல்லூரிகளிலும், மியூசிக் அகாடமி, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் போன்ற இசை திருவிழாக்களில் மிகவும் பரிசுகளை பெற்றார் தமிழ் நாட்டின் லோயர் மற்றும் ஹையர் கிரேடு தேர்வுகளில் வீணையிலும் வாய்ப்பாட்டிலும் முதன்மையாக தேர்வு பெற்றார்.  

சென்னை தூர்தர்ஷன் மறுபக்கம் என்ற தலைப்பில் மோகனின் PSLV  வேலையும் நேர்காணல் மற்றும் அவர் வீணை வாசிப்பதையும் ஒளிபரப்பு செய்தார்கள்

மோகன் மிக உயர்ந்த பதவிகள் (எண்ணெய் & காஸ் கம்பெனிகளில்) பணியாற்றி, இப்பொழுது ஓய்வு பெற்றுள்ளார். தனது உயிரினும் மேலான சங்கீதத்தை மீண்டும்  வெளிகொணர்ந்து, தான் சிறு வயதில் கற்ற பாடல்களை வீடியோ மூலம் யு டியூபில் கொண்டு வந்துக்  கொண்டிருக்கிறார். அதை காண,  நீங்கள் நல்லான்மோகன் லிங்க்கிற்க்கு செல்லவும்.  

Read More...

Achievements

+4 more
View All