என்னுடைய இந்த நாவலான "மீள் கனவே" மூலம் உங்களை முதன் முறையாக சந்திக்கிறேன். இக்கதையில் எட்டு ஜோடிகள் இடம் பெற்றுள்ளனர். இக்கதையின் முதல் நாயகி தன் ஆருயிர் கணவனையும், குழந்தையையும் காப்பாற்ற சந்திக்கும் இன்னல்களும், அவளுக்கு கிடைத்த இரண்டாவது நாயகியின் உண்மையான நட்பும், அவளது உதவும் சுபாவமும் நம்மை பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.
முதல் நாயகிக்கு ஏற்பட்ட துரோகமும்,தன் குடும்பத்தை அவள் காப்பாற்றி அவர்களுடன் சேர்வாளா? இரண்டாவது நாயகியை ஏமாற்றிய காதலனும், அவளின் பிரச்சனையை போக்க வந்த அன்புள்ளம் கொண்ட இரண்டாவது நாயகனின் கரத்தினை பிடிப்பாரா?
மற்ற நாயகிகளும் தன் பிரச்சனையை சரி செய்து, நாயகன்களுடன் இணைவார்களா?படித்து பாருங்கள். உங்களுக்கு எந்த ஜோடியை பிடித்திருக்கிறது? எந்த நாயகன், நாயகியின் குணாதீசங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்று உங்களது கருத்துகளை கூறுங்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners