Share this book with your friends

Nagarpurakkaadu / நகர்புறக்காடு

Author Name: Adithya Anbarsu | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தொழிலாளர்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? எத்தனை வகைகளாக கூடவும் பிரிக்கமுடியும். எத்தனை வகைகளாக பிரித்தாலும், அதில் கடைசியில் இருப்பவர்கள்தான், நான் பார்க்கும் இந்த தொழிலாளர்கள். இவர்களை மதம், சாதி, மொழி, இனம் என்று வேறுபடுத்த முடியாது. இவர்கள், அனைவரும் வறுமை என்ற ஒரு கோட்டின் மேல் நிற்பவர்கள். இவர்கள் ஓடுவதால் மட்டுமே, இந்த பூமி சுழலும் என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனென்றால், இவர்கள் இல்லாத உலகத்தை நினைத்துப்பாருங்கள். மாட்டுவண்டியில், மாடுகள் இல்லாத கதைதான். அதன்பின்பு, சாட்டையை தூக்கிக்கொண்டு யாரை அடிப்பான் வண்டிக்காரன். இவர்கள் இல்லையென்றால், இங்கு எதுவுமே முழுமை பெறாது. இவர்கள் தான், உலகத்தில் முதன்மையாக போற்றப்படக் கூடியவர்கள். ஆனால், உண்மையில் அப்படியா இருக்கிறது? 
திருப்பூர். டெக்ஸ்டைல் துறையில் கொடிகட்டி பறக்கும் அல்லது பறந்த நகரம். அந்த நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள், வேலைக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் வறுமையில், வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வருபவர்கள் என்று மூன்றுவிதமான தொழிலாளர்களில், ஐந்து பேரின் வாழ்க்கையில் நடக்கும் இன்பதுன்பங்கள், ஆச்சரியங்கள், ஆசைகள், தேவைகள், துரோகங்கள், நம்பிக்கைகள் பற்றி நகர்புறக்காடு பேசுகிறது.

அவர்களுக்கு, இந்த நகரம் கற்றுக்கொடுப்பது என்ன? அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுமா? அல்லது அவர்களை வீழ்த்துமா? 

 

Read More...
Paperback
Paperback 449

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆதித்யா அன்பரசு

அன்பரசு வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். திருப்பூர் நகரில் பிறந்து வளர்ந்தவர். 12 வருடங்களாக அந்த நகரத்தில், டெக்ஸ்டைல் துறையில், பல்வேறு பிரிவுகளில் சலிப்புடன் அல்லது வேண்டாவெறுப்புடன் வேலை பார்த்தவர். புனைவு கதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். புனைவில்லா கதைகள் எழுதுவது பற்றியும் யோசித்துக் கொண்டிருப்பவர். சிறுசிறு கதைகள் அவர் எழுதினாலும், முழுமையாக அவரை திருப்திபடுத்தியது இந்த நகர்புறக்காடு நாவல் தான். எழுதுவதைத்தவிற புத்தகங்கள் படிப்பதிலும், விளையாட்டிலும் ஆர்வமுள்ளவர்.

நீங்கள் கண்டிப்பாக அவரை மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம். adithyanbarasu@gmail.com

Read More...

Achievements