#writeyourheartout

Share this product with friends

Purananurru Veeran / புறநானூற்று வீரன்

Author Name: Thirumurugankalilingam | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

வீரம் செறிந்த சங்கிலியன், அடிமைத்தனத்திற்கு ஆட்படாத பண்டார வன்னியன் என எத்தனையோ வீரத்மிழர்களை அள்ளிக் கொடுத்தது தமிழீழம். இவர்களின் வழித்தோன்றலாக பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, விடுதலைப் புலிகள் எனும் மாபெரும் புரட்சிப் படையை உருவாக்கி பாசிச சிங்களத்திற்கு எதிராக போர்தொடுத்து எத்தனையோ தியாகங்கள், வீரச்சமர்கள், ஊடறுப்பு வியூகங்களை நடத்திக் காட்டி வெற்றி கண்ட மாபெரும் வீரன் மேதகு வே.பிரபாகரன்! அத்தகைய மாவீரனைப் பற்றியதே இப்படைப்பு!

இப்படைப்பில் உள்ள குறில் எழுத்துக்கள் கூர்வாளாக பகைமையை அறுக்கும். நெடில் எழுத்துக்கள் தமிழினத்தின் கவசமாய் திகழும். இவ்விரண்டையும் தன் ஆன்மாவென தரித்து வாழ்ந்த ஓர் மாவீரனைப் பற்றியே இப்படைப்பு புகழும்! 

என்னே ஒரு வீரம்! என்னே ஒரு போர்த் திறன்! என்று வாசிக்கும் போதே பல இடங்களில் நமை அறியாது சிலிர்த்து விடுகிறது. இன்றைக்கும், தலைமுறை தலைமுறையாக நாளை வருவோர்க்கும் வீரத்தையும் விவேகத்தையும் ஊட்டும் சேனையே இப்படைப்பு! 

புறநானூற்றை படிக்காதவர்கள் கூட, இந்த வீரஞ்ச்செரிந்த "புறநானூற்று வீரன்" வரலாற்றைப் படித்துவிட்டால் போதும்!

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

திருமுருகன்காளிலிங்கம்

உன் எழுத்துக்கு சக்தி இருந்தால், ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால் கூட அந்தக் காகிதம் எரியும் நெடியைப் பெற்றிருக்க வேண்டும்! திருமுருகன்காளிலிங்கத்தின் எழுத்தும் அது போன்றதே! 

தாம் பிறந்த மண்ணையும், இத்தமிழ் பேரினத்தையும் நேசித்து நிற்பவர். மண், மக்கள், புரட்சி என இம்மூன்றையும் தன் மதி வழி ஏற்றி விரல் வழி கொடுப்பதில் சிறந்தவர்!

இவரின் கருத்தில் ஒரு புரட்சி உண்டு‌. இவரின் எழுத்து நடையில் ஒரு ஆற்றல் உண்டு‌‌. தமிழினத்தின் பண்பாட்டு மரபில் அவர் ஆழவேரோடி நிற்பதால் அவரது கவிதைக்கு அலாதியான வீச்சும் வலிமையும் உண்டு! 

மனித அவலங்களையும், ஏக்கங்களையும், இனவாதக் கொடூரத்தின் அராஜகப் போக்கை அழுத்தமாக உணர்த்திக் காட்டுவதுடன், ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த இளைஞர் படையையும், பின்னாளில் தலைவன் ஒருவன் உருவான கதையையும் உயிரோட்டத்துடன் ஆவேசமிக்க கொதிப்புணர்வுடன் நிழல் விழா கோபுரம் போல்  கட்டி எழுப்பியுள்ளார் திருமுருகன்காளிலிங்கம்!

Read More...

Similar Books See More