வாடாவஞ்சி தலைமலைந்து
கூடார்மண் கொளல்குறித்தன்று. - கொளு
வாடாத பொன்மலர் வஞ்சி சூடிக்கொண்டு
இணக்கம் இல்லாதவர் மண்ணைக் கொள்ளக் கருதியது
செங்கண் மழவிடையிற் றண்டிச் சிலைமறவர்
வெங்கண் மகிழ்ந்து விழவமர – அங்குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
குஞ்சி மலைந்தானெங் கோ.
சினம் கொண்ட காளை போல்
சிலைமறவர் விழாக் கொண்டாட
வணங்காரை வணக்க
மன்னன் வஞ்சி மலர் சூடினான்
வஞ்சியரவம்
வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க
ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று.
முரசும் களிறும் முழங்க வாள் மறவர் போருக்கு எழுதல்
பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக
வௌவிய வஞ்சி வலம்புனையச் – செவ்வேல்
ஒளிறும் படைநடுவ ணூழித்தீ யன்ன
களிறுங் களித்ததிருங் கார்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners