Share this book with your friends

Ramakritinar Thiruvilaiyadarpuranam / இராமகிருட்டிணர் திருவிளையாடற்புராணம்

Author Name: Sai Adimai | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தியநாடு கண்ட மிகப்பெரும் ஞானி. சிறிய கிராமத்தில் அவதரித்து இளவயதிலேயே இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர். காளிகோவில் பூசாரியாகிக் காளியின் தரிசனம் பெறத் துடித்து அழுது, அலறி, அரற்றி, கொஞ்சி,  கெஞ்சி முயற்சி செய்து நிற்கையில், பலரின் பரிகாசத்திற்கும் ஏளனத்திற்கும் ஆளாகியும் எதற்கும் கவலைப்படாமல் தனது ஒரே குறிக்கோளில் விடாப்பிடியாக இருந்தார். பலவாறு வேண்டியும் காளி தரிசனம் கிட்டாமல் மிகவும் மனம் வெறுத்து உயிர்தரிக்க விரும்பாது சிலையின் கையில் இருந்த வாளை எடுத்துத் தனது தலையை வெட்டிக்கொள்ள முயற்சி செய்யும்போது காளி அவருக்குக் காட்சிதந்தாள். காளியைத் தொட்டு, விளையாடி, பேசி, கொஞ்சி அவளுக்கு உணவூட்டிப் பலவாறும் மகிழ்ந்தார். அவளுடைய ஆக்ஞைப்படி சனாதன மதத்து பிரிவுகளில் கூறப்பட்டுள்ள வெவ்வேறு முறைகளையும் அனுட்டித்து அவையனைத்தும் கூறுபவை உண்மையென்று கண்டறிந்தார். வாத்சல்யபாவம், நாயக நாயகிபாவம், தாசியபாவம், சாக்கியபாவம் மற்றும் தந்திரசாதன முறை மூலமும் இறைவனை அடையலாம் என்ற  உண்மையைக் கண்டறிந்தார். பைரவி பிராம்மணி, சடாதாரி, தோதாபுரி முதலியோரைக் குருவாகப் பெற்றிருந்தார்.

மேலும், இசுலாமிய, கிறித்தவ, சீக்கிய, சமண மற்றும் பௌத்த சமயங்களை அனுட்டிப்பது மூலமும் இறைவனைக் கண்டறியலாம் என்று அவற்றை அனுட்டித்து உணர்ந்தார்.

மணம் புரிந்தும் மனைவியை இறைவியாகக் கருதி பூசை புரிந்து குரு-சீட உறவை அனுட்டித்து அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து காட்டினார். நிறைய இளைஞரை சீடராக்கி அவர்களுக்கு சேவை மற்றும் தொண்டு செயக்கூறி அதன்மூலம் இறையருளைப்பெற அறிவுறுத்தினார்.

சனாதனத்தில் மூடநம்பிக்கை, பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், வகுப்பு வேறுபாடு முதலிய தீய பழக்கவழக்கங்கள் இருக்கிறதென்று கூறி மதமாற்றம் செய்துவந்த காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் அவரது சீடர்கள் சனாதன தருமத்தைக் காப்பாற்றினர். சுவாமி தயானந்த சரஸ்வதி, இராஜாராம் மோகன்ராய் மற்றும் பலரும் அவ்வப்போது தோன்றிவில்லையேல் இந்நாள் இந்நாட்டில் சனாதனத்தை அனுட்டிப்பவர் எவரும் இருந்திருக்க மாட்டார்கள். 

Read More...
Paperback
Paperback 810

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சாயி அடிமை

தமிழ்நாட்டின் நாகரீகம் அறியாத சிறு கிராமமொன்றில் இளம் பருவத்தைக் கழித்து, பட்டமேற்படிப்பு படித்தும் வேலையின்றி இரண்டாண்டுகள் தவித்துப் பெற்றோருக்குச் சுமையாக இருந்து, பிறந்ததற்கு மிகவும் வருந்தி,  நிர்க்கதியாய் இருந்த காலத்தில் காஞ்சி மகாசுவாமிகளின் ஆசியால் வேலை கிடைக்க, பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆற்ற வேண்டிய கடன்களை முடிந்தவரை செய்ய, மகான்கள் மற்றும் இறையருளேக் காரணமாகும். 

அரசு சார்ந்த PSU ஒன்றில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின்பு, மனிதருள் தெய்வமாக வாழ்ந்து, பலவாறான அற்புதங்கள் ஆற்றி அடியவர்க்கு அனேக விதத்தில் பேருதவி புரிந்து,  சமாதியேற்ற உத்தம புருடர்களின் வரலாற்றைப் பாடலாக எழுத உத்வேகம் பெற்று, அதன் விளைவாக இராமகிருஷ்ண பரமஹம்சரின் வரலாற்றை விவரிக்க எடுத்த ஒரு சிறிய முயற்சி தான் இந்நூல். "சிரடி சாயி திருவிளையாடற் புராணம் ", "காஞ்சி மகாசுவாமி திருவிளையாடற் புராணம்", "இராகவேந்திர சுவாமிகள் திருவிளையாடற் புராணம்" என்பன ஆசிரியரின் இதர புத்தகங்கள்.  இந்நூற்களையும் படித்து மகான்களின் ஆசிகளுக்குப் பாத்திரமாக ஆகுமாறு ஆசிரியர் வேண்டுகிறார். இந்நூலைப் படிப்பவர்களையும் இராமகிருஷ்ண பரமஹம்சர் மீது பத்தி செய்து பலன் பெறுமாறு வேண்டுகிறார்.

இதை நம்பிக்கையுடன் படிக்கும் அடியார் அனைவருக்கும் இராமகிருஷ்ண பரமஹம்சர் பதினாறு வகைச் செல்வங்களையும் அருளுமாறு நூலாசிரியர் மனப்பூர்வமாக வேண்டுகிறார்.

புத்தக விற்பனையால் கிடைக்கும் இராயல்டி முழுதுமாக சாரதா ஆஸ்ரமம், உளுந்தூர்பேட்டை மடத்திற்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

 தமிழ்கூறும் நல்லுலகு இப்புத்தகத்தையும், ஆசிரியரையும் ஆதரித்தால் இதுபோன்ற பலநூற்கள் எழுதிப் பிரசுரிக்க  ஏதுவாகும். 

இராமகிருஷ்ணர் பாதம் சரணம் ! சாரதாமணி பாதம் சரணம் ! விவேகானந்தர் பாதம் சரணம் !

Read More...

Achievements

+9 more
View All