Share this book with your friends

Sandwich / சாண்ட்விச் Punarthalin Oodal Inidhu/புணர்தலின் ஊடல் இனிது

Author Name: Dharani Rasendran | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

இந்த நாவல் பதின் பருவம் தொட்டு ஒரு ஆண் முதல் குழந்தை பெரும் வரை அவனின் காமம் மற்றும் எதிர் பாலினம் குறித்த மாயைகளை விடுத்து, எதார்த்தத்தை புரியவைக்கும். 

பாலியல் தொடர்பாக ஒரு ஆண் நம் சமூகத்தில், சமூகத்தால் எவ்வாறு வளர்கிறான், வளர்க்கப்படுகிறான். எதிர் பாலினம் பற்றிய அவனின் புரிதல்களை எவ்வாறு அவன் அறிந்திருக்கக்கூடும். சமூகம் அதற்கான சாதனமாக எதை கொடுத்திருக்கிறது. சற்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்றுமேயில்லை. இந்நிலையில் ஒட்டு மொத்த சமூக உளவியலுக்கும் அதன் மேம்பாட்டிற்கும் பாலியல் குறித்தான வெளிப்படை அறிவார்ந்த பேச்சுகளும் புரிதல்களும் தேவை. அதற்கான ஒரு சிறு முயற்சியே இந்நாவல். 

Read More...
Paperback
Paperback 180

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தரணி ராசேந்திரன்

2012இல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் திரைத் துறையில் ஆர்வம் கொண்டு அதில் பயணிக்க தொடங்கினார். தன்னாட்சி முயற்சியாக “ஞானச்செருக்கு” என்ற முதல் முழுநீளப் படத்தை உருவாக்கினார். 2019 தொடங்கி நாற்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக “ஞானச்செருக்கு” அங்கீகரிக்கப்பட்டது. இவரின் இரண்டாவது திரைப்படம் “யாத்திசை”, இது ஒரு வரலாற்று காலகட்ட புனைவு.      

இவரின் முதல் நாவல் “நானும் என் பூனைக்குட்டிகளும்”, சிங்கப்பூர் இலக்கிய வட்டத்தில் சிறந்த நாவலாகத் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை 2021ஆம் ஆண்டிற்கான அசோகமித்திரன் விருதை வழங்கி கௌரவித்தது. விடுதலை கலை இலக்கிய பேரவை முன்னெடுத்த 2021ஆம் ஆண்டிற்கான இளவந்திகை கலை இலக்கிய திருவிழாவில் சிறந்த நாவலுக்கான விருது இவரின் “லிபரேட்டுகள்” நாவலுக்கு வழங்கப்பட்டது.      

Read More...

Achievements