Share this book with your friends

Thoondil / தூண்டில்

Author Name: Mano Charles | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சமுதாயச் சிக்கல்களையும், அதனால் நம்மில் ஏற்படும் உளவியல் மாற்றங்களையும், அறிவியல் உண்மைகளோடு சிறிது கற்பனைகளையும் கலந்து எழுதப்பட்ட ஐந்து தொடர்பில்லாத சிறுகதைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். வெவ்வேறு மொழி நடைகளில் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது. அறிவியலைப் பற்றியும், மனித உணர்வுகளைப் பற்றியும் பகுத்தறியாமல் நாமும் நம் சமுதாயமும் எடுக்கும் முடிவுகள், பல நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. வாழ்க்கைச் சக்கரத்தின் வேகச் சுழற்சியின் கோரப் பிடியில் சிக்கித்தவிக்கும் சிந்தனைகளிலிருந்து வாசக நெஞ்சங்களை விடுவிப்பதே இப்புத்தகத்தின் உள்நோக்கம். வாருங்கள் இணைந்து பயணிக்கலாம்.

Read More...
Paperback
Paperback 220

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மனோ சார்லஸ்

பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான மனோ சார்லஸ் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். சிறு வயது முதலே கதைகளின் மீது தீராத காதல் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளும், கதாப்பாத்திரங்களும் குறிப்பேடுகளின் கடைசி பக்கத்தில் கிறுக்கல்களாக மட்டுமே இருந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அவர் படித்த ஜார்ஜ் ஓர்வெல்லின் 1984 என்ற புத்தகம் அவருக்குள் ஏற்படுத்திய தாக்கம், அக்கிறுக்கல்களுக்கு வடிவம் கொடுத்து கதைகளாக மாற்ற உத்வேகம் கொடுத்தது. இயற்பியலின் கோட்பாடுகளைத் தன் கதைகளில் சேர்த்திருப்பது அறிவியலின் மீது அவருக்கிருக்கும் வேட்கையை வெளிப்படுத்துகிறது. தனிப்பட்ட ஒருவரின் உணர்வுகளையும், கருத்து சுதந்திரத்தையும் போற்றும் அவரை பரந்த கொள்கையுடையவராகச் சொல்லலாம். அவரது மாறுபட்ட சிந்தனைகளைப் போலவே, அவருடைய கதைகளையும் குறுகிய வட்டத்திற்குள் வகைப்படுத்தி அடைத்து விட முடியாது. 

Read More...

Achievements

+1 more
View All