இருபது ஆண்டுகளுக்கு முன், திருச்சிராப்பள்ளியில் நண்பர் ஒருவருக்கு நடந்த திருமணத்துக்குப் போய்விட்டுச் சென்னை மாநகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தையடைந்ததும் பயண அலுப்புத் தாங்காமல் அவசரமாக வண்டியை விட்டு இறங்கலானேன். நான் அமர்ந்து வந்த பெட்டிக்கு முன்னுள்ள பெண்கள் பெட்டியிலிருந்து ஏராளமான பெண்கள் இறங்கினர். இக்கூட்டத்தில் தென்பட்ட ஒரு முதியமாதும் இளமங்கையொருத்தியும், என் கவனத்தைக் கவர்ந்தனர். தாயும் மகளும் போலிருந்த இருவருமே விதவைகளாயிருந்தனர். பதினெட்டு வயது கூடச் சரியாக நிரம்பாத அந்த இளம்பெண் துவைத்துக் காவியேறிய வெள்ளைப் புடைவை கட்டிக் கொண்டிருந்தாள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners