இந்த நூலின் மூலம் கன்னடம்.இதன் ஆசிரியர் சம்பா ஜெய்பிரிகாஷ், இந்த நூலிற்காக கர்நாடக மாநிலத்தின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பற்றி மையமிட்டே இந்த நூல் அமைந்துள்ளது. அக்குழந்தைகளின் மனநிலை, உடல்மொழி, முதலியவைகளைப் பற்றி மிக நுட்பமாக பேசிகிறது.
இத்தகைய சிறப்பு குழந்தைகளுக்கு முறையாக அளிக்கப்படும் கவனிப்புகள் மற்றும் பராமரிப்புகளின் மூலம் அவர்களை சிறப்பான குழந்தைகளாக மாற்றமுடியும் என்பதை பரிசோதனை முயற்சியின் மூலம் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். மனதை உலக்கும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புனைவுதான் இந்தப் புத்தகம்
உலகெங்கிலும் உள்ள சிறப்புக் குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர்களும், சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்கிற பள்ளிகளும் இந்நூலை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.