கிபி 13ஆம் நூற்றாண்டு
வலிமைமிக்க சோழப்பேரரசு வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருந்தது. கொடியவர்கள் அறிந்துவிடக்கூடாத ரகசியத்தைக் காக்கும் பொறுப்பு மூன்றாம் இராஜேந்திர சோழனின் தோள்களில் விழுந்தது.
கிபி 1996
பரபரப்பான வழக்கு ஒன்றைத் தோற்றுநிற்கும் வக்கீல் விக்ரமனைப் பழிதீர்க்க நினைக்கும் அவரது வாடிக்கையாளர் அவர் சார்ந்த அனைவரையும் கொலை செய்யத்திட்டமிட்டு அவரது மகனைக் கடத்துகிறார்.
கிபி 2012
உலகத்தின் இறுதியைக் கணிக்கிறது மாயன் நாட்காட்டி. ரைலான்ட் எனும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கம்போடியாவிலுள்ள ஆங்கோர்வாட் கோவிலில் ஒரு நட்சத்திர வடிவ பெட்டகத்தைக் கண்டுபிடிக்கிறார்.
வாட்டிகன்
வாட்டிகன் சிட்டியின் ரகசிய அறைகளுள் நுழையப் பார்த்த பத்து நபர்களை அவர்கள் ஆயுதங்களோடும் வெடிபொருட்களோடும் கைது செய்தது வாட்டிகன் காவல்துறை.
உலகத்தை அழிக்க நினைக்கும் தீய சக்திகளிடமிருந்து காக்க வரும் நமது கதாநாயகர்கள், முக்கோணங்களின் பின் மறைக்கப்பட்ட ரகசியத்தை நோக்கிப் பயணிக்கின்றனர்.
மானுடம் காக்கப் புறப்படும் அவர்கள் வெற்றிபெறுவரா?
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Delete your review
Your review will be permanently removed from this book.Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners