ரோச்சா டிசோசா, ஒரு சிறப்பு மத்திய புலனாய்வு அதிகாரி, அதி களவில் தெரு நாய்கள் மாயமாக மறைந்து வரும் ஒரு வழக்கை விசாரித்து துப்புத்துலக்க, அது நேரே இலட்சத்தீவுகள் நோக்கி அவரை வழிநடத்துகிறது. அதற்காக, விலங்குகள் நல ஆர்வலர் கள் உட்பட புலானய்வு குழுவினருடன் இணைந்து ரோச்சா மத் திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கவரத்தி காவல் துறையின் ஒரு சிறப்பு ஆயுதமேந்திய காவல்படையை துணைக்கு அமர்த்திக்கொண்டு இலட்சத்தீவுகள் காட்டில் தேடல் வேட்டையை தொடர, இறுதியில் அவர்களது தேடல் வேட்டை ஒரு பிரமாண்ட மதில் சுவர் கொண்ட கோட்டையில் முடிவடைகிறது. அந்த கோட்டைக்குள் நுழைய முயன்ற ஆயு தப்படையினரும் ரோச்சாவும் கோட்டைக்குள் ஒரு பெரிய சாம்பிராஜியத்தையே நடத்திக்கொண்டு வரும் வில்லனிடம் சிக்கிக் கொண்டு ரோச்சா மற்றும் ஆயுதப்படை துணை தலைமை அதிகாரியை தவிர மற்றனைவரும் அந்த வில்லனின் அசுரப்படைப்பிடம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தெரு நாய், சிக்கி உயிரிழக்கின்றனர். மேலும் அவ்வில்லன் வேறு யாருமல்ல அது மத்திய உள்துறை மந்திரிதான். இந்நிலையில் வில்லன் இந்திய இறையாண்மைக்கு எதிராக தீட்டிய சதித்திட்டத்தை நிறைவேற்ற தனது அசுரப்படையுடன் புறப்பட்டு சென்னை மெரினாக் கடற்கரையில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தை அடைகிறான். வில்லனின் கோட்டைக்குள் தனியே சிக்கிக்கொண்டு உயிருக்காக ரோச்சாவும் துணை தலைமை அதிகாரியும் தங்களால் இயன்றவரை ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க மறுபுறம் வில்லனின் அசுரப்படை மெரினா கடற்கரையில் எவ்வித அழிவை ஏற்படுத்தியது, மேலும் அந்த அசுரப்படைக்கு தோல்வி ஏற்பட்டதா என்கிற கேள்விகளுக்கு விடைகான
தவறாமல் படியுங்கள் - உங்கள் அபிமான
"அசுர இராஜ்ஜியம் ஆரம்பம்."