இந்த புத்தகத்தில் காமத்தையும் காதலையும் எனது மொழியில் மொழிந்திருக்கிறேன். காதல் மற்றும் காமத்தின் பால் கொண்ட உங்கள் எண்ணங்கள் இந்த புத்தகத்தில் அழகாக இழைக்கப்பட்டிருக்கின்றன .
என் பெயர் கார்முகிலன். நான் என் கவிதைகளை இணையத்தில் பல வாசகர்களின் முன்னிலையில் வாரி இழைத்துக்கொண்டிருக்கிறேன் . என் கவிதைகளையும் என் தமிழையும் பார்த்து விட்டு தமிழை முதன்மையாக கொண்ட துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று எண்ணிடாதீர்கள். நானும் உங்களில் பலரை போல பொறியியல் படிப்பை முடித்தவன் தான். என் வார்த்தைகள் என் கற்பனைகளின் வெளிப்பாடு .