காதல் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. இந்த உலகம் காதலில் தோன்றி காதலில் முடிகிறது. காதல் இல்லா வாழ்க்கையை கடவுளாலும் நினைத்துப் பார்க்க இயலாது. என்னுடைய எழுத்துக்களின் வாயிலாக அந்தக் காதலை குறித்த சில கவிதை வரிகள்.
வணக்கம். என்னைப் பற்றி கூற பெரிதாக ஏதுமில்லை. கட்டுப்பாடுடன் கூடிய சமூகத்தில் பிறந்து பல கனவுகளுடன் பயணிக்கும் ஒரு சாமானிய பெண், நொடிக்குநொடி மாறுகின்ற இந்த வாழ்க்கை பயணத்தில் எழுத்துக்கள் மட்டுமே எனக்கு மாறா ஆறுதல். இதுவரை இல்லாதவாறு என் கற்பனைகெட்டியவரையில் காதலை கொண்டு வந்துள்ளேன். உங்களை கட்டாயம் இக்காதல் திருப்திபடுத்தும் என நம்புகிறேன். எனக்கும் என் எழுத்துக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.