ஔவைக்குறள் எனும் நூலில் அடங்கியுள்ள 310 குறளில் தமிழ் சித்தர்களின் மெய்ஞானம் அத்தனையும் சுருங்கச் சொல்லி தெளிவாக்குகிறது இந்தப்புத்தகத்தில் அதற்கான தெளிவுரை மிக விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது திருக்குறள் விவரிக்கும் அறம், பொருள், இன்பம் போன்றே இக்குறள்களும் மானிட தேக அமைப்பு, அதனுள் துலங்கும் ஆதி அறிவு, வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.
இன்னும் பிறப்பு இறப்பு என்றால் என்ன? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது? அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் அதை அடையும் வழி முறைகள் என்ன? வாசியோக நிலை, சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்க்கங்களை விட, ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது.
தமிழர்களின் மெய்யியல் முழுவதும் உணர இந்த ஒரு புத்தகம் போதுமானது . இதில் 52 குறள்கள் மட்டுமே விரிவாக விளக்கப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்துதொகுப்புகள் மீண்டும் அடுத்து வெளிவரும் .
இது புதுச்சேரியில் வசிக்கும் அண்ணாமலை சுகுமாரன்எனும் தமிழ் சித்தர்நெறி ஆய்வாளர் எழுதியது
இதுவும் தொடராக வந்து பலரது பாராட்டைப்பெற்றது ..
இப்போது தொகுக்கப்பட்டு முதல் புத்தகமாக வெளிவருகிறது .
தமிழர்களின் மெய்ஞ்ஞானத் தெளிவிற்கு இந்த புத்தகம் ஒரு சான்றாக விளங்குகிறது .தமிழர்கள் தவறவிடக்கூடாத ஒரு புத்தகம் இது .
தமிழர்கள் அனைவர் வீடுகளிலும் அவசியம் இடம்பெற வேண்டிய புத்தகம் .
#TamilSongs, #VinayagarAgaval, #Thirumoolar, #Wisdom, #Avvaiyinkural, #avvaiyinkural,
#Nadi, #ChandraNadiPranayama, #chandranadipranayama, #SuryaNadiPranayama, #suryanadipranayama,