Share this book with your friends

Buddhism and Thirukkural / பவுத்தமும் திருக்குறளும் Thirukkural - An Ancient Buddhist Doctrine / திருக்குறள் - ஒரு பவுத்த தத்துவ நூல்

Author Name: Dr. G. Ravivarman | Format: Paperback | Genre : Self-Help | Other Details

புத்தரின் போதனைகளில் மானுட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் சமூகநீதி, வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, முறையாக பொருள் சேர்த்தல், அவற்றறை இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், பகிர்ந்தளித்தல், பெண்ணின் பெருமை மற்றும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு மற்றும் கருணை கொள்ளுதல், தீவினை களைந்து அறநெறி வாழ்வு ஏற்று வாழ்வில் இன்பம் எய்துதல், இயற்ககைக்கு மாறான மேலான படைப்பு சக்தி எதுவும் இல்லை என நம்புதல், மூட நம்பிக்கைகளை கைவிட்டு நல்ல வற்றில், உழைப்பில் நம்பிக்ககை யும் விடாமுயற்சியும் வெற்றிக்ககான வழிகள் என்னும் புத்தரின் பல்வேறு கோட்பாடுகளை வள்ளுவர் தமது குறளின் மூலம் வடித்துத் தந்துள்ளார். புத்தரின் சமகாலத்தவர்களால் முன்வவைக்க்ப்ப்ட்ட இதர, சமூக நீதியற்ற, பகுத்தறிவுக்குப்புறம்பான இந்திய தத்துவங்களின் கோட்பாடுகளுக்கும், அணுகுமுறை களுக்கும், மாற்றாக, சமூகபொருளாதார பண்பாட்டுத் தளங்களில் மிகவும் முழுமையான , மிகவும் புரட்சிகரமான , ஒரு முயற்சியை , நீதியான சமத்துவ சமூக அமைப்பை உருவாக்குவதின் அவசியத்தை உலகில் முதன் முதலாக, பௌத்தம் பிரதிநிதித்துவப்படுத்தியது இக்கருத்துக்களையே வள்ளுவமும் வலியுறுத்துகிறது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

டாக்டர். கோ. இரவிவர்மன்

தமிழ் நாட்டிலுள்ள, சென்னை மருத்துவக்கல்லூரியின் நோய் தடுப்பு மருத்துவத் துறையின் இயக்குனராகவும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட மருத்துவ பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூலம், கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களும், பட்டங்களும் (B.Sc. M.B.B.S.,M.D.,D.P.H.,D,P.M,) பெற்றுள்ளார். பன்னாட்டு குழந்தைகள் வளர்ச்சி நிதி (யுனிசெப்) மற்றும் அ.இ.ம.நி (எய்ம்ஸ்), டெல்லி நிறுவனங்களுடன், ஆலோசகராகவும், மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். டென்மார்க் நிதி (DANIDA -RCH) உதவி, உலக வங்கி நிதி (WB-ICDS.III) மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பு திட்டம் ஆகிய நிறுவனங்களில் ஆலோசகராகவும், மேலாண்மை நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ இதழ்கள் வெளியிட்டுள்ளார். தற்போது “பன்னாட்டு தொற்றுநோயியல் மருத்துவ ஆராய்ச்சி நெட்வொர்க்” (INCLEN) அமைப்பில் ஆயுள் உறுப்பினராகவும், “இந்திய தொற்றுநோயியல்  மருத்துவ ஆராய்ச்சி நெட்வொர்க்” (IndiaCLEN) அமைப்பின், செயலாளராகவும், தலைவராகவும் இருந்துள்ளார்.

முழுப்பெயர்: டாக்டர். கோ . இரவிவர்மன்.

வகித்தபதவி: இயக்குநர் மற்றும் பேராசிரியர், நோயியல் தடுப்பு மருத்துவத்துறை.

நிறுவனம்: நல்வாழ்வு மற்றும் நோயியல் தடுப்பு மருத்துவத்துறை, தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை.

நாடு: இந்தியா.

Read More...

Achievements