திருச்சபைகளில் நடக்கும் ஆராதனைகளை பாடல்களும், நடனங்களும், குருநாடகங்களும் சிறப்பிக்கின்றன. இந்த நூலில் உள்ள குறு நாடகங்கள், அருட்திரு. A. தேவசகாயம் அவர்களின் துணைவியார் திருமதி. அகஸ்டா சகாயம் அவர்கள், சுமார் 35 ஆண்டுகள் கல்விப்பணி ஆற்றிய நாட்களில் வேதாகம நாடகங்களையும், சமூக நாடகங்களையும், சரித்திர புருஷர்களின் நாடகங்களையும் எழுதி பள்ளி மாணவர்களையும், திருச்சபை வாலிப சகோதர சகோதரிகளையும் வழிநடத்தினார்கள். தனது துணைவியார் திருமதி. அகஸ்டா சகாயம் அவர்களின் மறைவிற்குப்பிறகு அவர்களது குறிப்பேடுகளை எடுத்து பலரின் உற்சாகத்தின் பேரில் இந்நூலினை திருச்சபையில் சிறப்பு ஆராதனைகளின்போது குருநாடகங்களுக்கு ஆயத்தப்படுத்துவோருக்கு பயன்படும் வகையில் எழுதியுள்ளார்.