என் புவி என்ற தலைப்பில், என் காதல் கதையை கவிதையாய் மெழுகு ஏற்றி வைத்துள்ளேன். என் புவி என்பது என் காதலியை குறிக்கும். அவளோடு வாழ்ந்த நாட்கள், அவளோடு கதைத்த காதல், என அனைத்தையும் சிறு சிறு கவிதையாய், சிறு சிறு கற்பனை சேர்த்து புத்தகமாய் இயற்றி உள்ளேன்
என் புவி என்ற தலைப்பில் நான் கிறுக்கிய அனைத்து கவிதைகளும் கற்பனையே. இருப்பினும் அந்த போதையை தந்த என்னவளுக்கு நன்றி.
காதல் ஒரு எளிமையான ஆச்சர்யம்.அந்த எளிமை புரிவதற்கு நீண்ட ஆச்சர்யத்துக்குள் நாம் முழ்க வேண்டும். ஆச்சர்யத்தின் எளிமை புரிவதற்குள், எளிமையாக தன்னை முடித்துக் கொண்டாள். ஆச்சரியங்கள் அதிகம் வாழ்வதில்லை.