மாதா பிதா குரு தெய்வம்” என்ற வரிகளிற்கேற்ப தாய் தந்தையற்கு அடுத்த படியாக போற்றப்படும் ஆசியர்கள், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத இடத்தை பெறுகின்றார்கள். இவ்வுலகத்தில் பிறப்பெடுத்த அனைத்து மானிடர்களும் கல்வியறிவை அவர்கள் வாழ்நாளில் மிக முக்கியமான சொத்தாகக் கருதுகின்றார்கள்.
எனவே அக்கல்வியறிவை வழங்கும் ஒவ்வொரு ஆசிரியர்களையும் போற்றி வணங்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.