வணக்கம் தோழமைகளே..
எனதழகே[கா] எனது பன்னிரண்டாவது நாவல். இது சற்றே பெரிய அளவிலான கதை. அதற்கேற்றார் போல் கதை மாந்தர்களும் அதிகமே!
தமக்கு உரிமையான இடத்தில் உடனிருக்கும் சக மனிதர்களால் பாகுபாடின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுச் சுயமரியாதையும் சீண்டப்படும் சூழல் உருவாக.. அங்கிருந்து இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் இரு குடும்பங்களின் வாழ்க்கைப் பயணமே இத்தொடர்.
ராஜாராமன், ருக்மணி, இளவரசு, ஈஸ்வரி.. கதையின் மூத்த, முக்கிய மற்றும் மூல கதாபாத்திரங்களாய் இவர்கள் நால்வரும்.
வெவ்வேறு குடிகளில் பிறந்த இளவரசுவும் ஈஸ்வரியும் சூழ்நிலையின் காரணமாக விருப்பத்துடனே திருமணப் பந்தத்தில் இணைய, அவர்களுக்கு உதவும் ராஜாராமனும், ருக்மணியும் ஊரார்களால் பல இன்னல்களைச் சந்தித்து.. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, தங்களது அடையாளங்களை மொத்தமாய் விடுத்து சொந்த ஊரிலிருந்து வெளியேறுகின்றனர்.
புது இடத்தில் புது மனிதர்களாய் அவர்கள் குடியேற.. இளவரசும், ஈஸ்வரியும்.. ராஜனின் சொல்படி வேறொரு கிராமத்தில் தஞ்சம் புகுகின்றனர்.
அதன்பின்பான இரு குடும்பங்களின் வாழ்க்கை மாற்றமும், அவர்களது வாரிசுகள் சந்திக்கும் போராட்டங்களுமே எனதழகே[கா].
தங்களுக்கான அடையாளங்களை வாரிசுகள் மீட்டெடுக்க முயற்சிக்க.. அதில் அவர்கள் அடையும் வலி, ஏமாற்றம், வெற்றி, தோல்வி, அன்பு, ஏக்கம், சுகம், காதல், நட்பு, உதவி, துக்கம் போன்றவை தான் கதை நிகழ்வுகளாய் மாறி உணர்வுகளாய் உங்களுடன் பயணிக்க இருக்கின்றன!
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு உள்ளும் உங்களை நீங்களே சில நொடிகளேனும் உணர்வீர்கள் அழகாய், சுகமாய்... இந்த எனதழகே[கா] வில்..
அன்புடன்..
நந்தினி சுகுமாரன்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners