ஜி.டி.நாயுடு இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்டவர்
கோவை, அவினாசி சாலையில் அவர் நினைவாக, ஜி.டி.நாயுடு மியூசியம் இருக்கிறது. தினசரி பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று பலர் வந்து செல்லும் மியூசியத்தில், ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல், பல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.
கோவை பீளமேட்டில் உள்ள அவரது “நேஷனல் எலெக்ட்ரிக் ஒர்க்ஸ்” என்ற தொழிற்சாலை தான் இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்தது.
கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்” என்று பாராட்டினார் சர்.சி.வி ராமன்.
மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்த ஜி.டிநாயுடு தனது 80 வது வயதில் 4 -1 -1974 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners