இக்கவிதை தொகுப்பு முரண்பாடு மேல் கட்டப்பட்டிருக்கிற ஒரு கண்ணாடி கட்டிடம். கண்ணாடி என்பதினாலே உடைத்துவிடலாம் என்ற நம்பிக்கை நமக்குள் இப்போதே உயர்ந்திருக்கும். முற்றிலும் உண்மையே. வாங்கி வாசியுங்கள், உங்கள் சிந்தனை கற்களை எறியுங்கள். ஒன்று மட்டும் நிச்சயம். உடைப்படும் அத்தனை கண்ணாடி துண்டுகளும் வாழ்வின் உண்மையை முகமெதிரே காட்டும். நாமே வெட்கப்படும்படியான, நம்மையே சங்கடப்படுத்தும் மறுக்கமுடியாத தவிர்க்க முடியாத வாழ்வின் உண்மைகள். தமிழ் மணக்க. -துரை.விமல்ராஜ்