பழம்பெரும் தமிழகத்தை சேர சோழ பாண்டியர்கள் என மூவேந்தர்கள் ஆண்டு வந்திருந்தாலும் அவர்களுக்குள்ளான அதிகார மோதல் எப்போதும் ஓய்ந்ததே இல்லை. தங்கள் சாம்ராஜ்யங்களை விரிவாக்குவதற்காக எத்தகைய வஞ்சகங்களுக்கும் துணிந்திருந்தார்கள் என்பதே வரலாறு. அப்படி பண்டைய இரணியமுட்டம் (தற்போதைய நீலகிரி) மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளை ஆண்டு வந்த பாண்டியர்களுக்கும், பண்டைய குட்ட நாட்டை (தற்போதைய கேரளம்) ஆண்டு வந்த சேரர்களுக்கும் இடையே நடந்த அதிகார மோதலில் கடைபிடிக்கப்பட்ட போர் முறைகள் வித்தியாசமானது. அதில் சேர நாட்டுக்கு உரித்தான மாந்த்ரீக தந்திர முறைகளை எப்படியெல்லாம் போர்களில் பயன்படுத்தினார்கள் அதை மாவீரர்களான நம் பழங்குடி இனமான தோடர் இன வீரர்களை கொண்டு பாண்டியர்கள் எப்படியெல்லாம் வீரத்தொடும் தீரத்தோடும் எதிர்கொண்டார்கள் என்பதை விவரிக்கும் கற்பனையான வரலாற்று நாவல் இது.