இஸ்ரேல், பலஸ்தீனம் அருகருகே இருப்பினும் இரு நாடுகளும் வட தென் துருவங்களாக தங்களுக்குள் அடித்துக்கொண்டிருக்க ஒரே கரணம் ஜெருசலேம். புனித பூமி ஜெருசலேமின்பால் அதிகாரம் செலுத்தும் இரு நாடுகளது இந்த விவகாரம் தற்போது எழுந்தது அல்ல. கிபி களிலேயே இதற்கான அடித்தளம் போடப்பட்டது. இவ்விரு நாடுகளுக்கிடையேயேயான பகையை பேச வேண்டுமெனில் யூதர்களின் வரலாறு, ஒன்பது சிலுவைப்போர்கள்,
ஓட்டமான் பேரரசின் வீழ்ச்சி, பாலசுதீன் விடிவெள்ளி யாசர் அராஃபத், 1948 ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையேயேயான உடன்படிக்கை என அனைத்தையும் ஆராய்வது அவசியம். அவை அனைத்தையும் உள்ளடக்கியதே இப்புத்தகம்.