வணக்கம்!
காதல் ஒரு மாயபிம்பம், இப்படித்தான் இருப்பேன் என்று கூறும் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் காட்டக்கூடிய ஒன்று. அதுவரை கட்டுக்கோப்பாக பேணிக் காத்து வந்த பலரின் சுயமரியாதையில் கைவைக்கும் ஒரு உணர்ச்சி, அறிவியல் ரீதியாகப் பார்த்தால் காதல் ஹார்மோன்களின் ஒரு அழிச்சாட்டியம். மனித வாழ்வில் சிலருக்கு வரமாக அமையும் இந்தக் காதல் தான். பலருக்கு சாபமாகவும் அமைந்துவிடுகிறது. காதல் புனிதமானது என்றால் உண்மையில் அந்தப் புனிதத்தன்மை காதலர்களிடமிருந்து தான் தோன்ற வேண்டும். காதலை மையப்படுத்தி எழுதப்பட்ட இக்கவிதைகள் கட்டாயம் உங்களுக்கு உங்களின் கடந்த கால அல்லது நிகழ்காலக் காதலைக் கட்டாயம் ஒரு கணமேனும் நினைவுபடுத்தும் என நம்புகிறேன். இப்புத்தகத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும். கண்டிப்பாக எனது இப்படைப்பு உங்களைத் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன். நன்றி.
என்றும் ப்ரியமுடன்
- கார்த்திகா சுந்தர்ராஜ்