காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு காதலின் ஆழத்தையும் காதலின் மகத்துவத்தையும் சொல்வதோடு மட்டுமல்லாமல் 90களில் காதலையும் 2000 ஆம் ஆண்டின் காதலையும் ஒப்பீடு செய்து உங்களுக்கு ஆக்கபூர்வமான வகையில் படைத்தளித்திருக்கிறேன். இதனை தவறான போக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆக்கபூர்வமான சிந்தனையில் இதனை எடுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன். ஒரு தெய்வீக உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி இவை இரண்டின் சமச்சீரான ஒன்றினைகளை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தை வாங்கும் எண்ணத்துடன் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பூமி
உள்ளவரை இந்த காதல் வாழும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும். புத்தகத்தை உருவாக்கவும் வடிவமைக்கவும் உதவியாக இருந்த என்னுடைய அனைத்து உதவியாளர்களுக்கும் என்னுடன் பயணித்த ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த மனிதர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். வணக்கம்! வாழ்த்துக்கள்!