காதல் நனைகிறது என்னும் இந்த கவிதைத் தொகுப்பின், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை அத்தனையும் காதல் கவிதைகளாக தான் இருக்கும். ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் தோன்றும் காதல் அது தரும் சுகம் வலி இன்பம் துன்பம் என்னும் பல்வேறு உணர்வுகளை சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில் அறிவியல் கலந்தும் சில இடங்களில் கற்பனையை ஊற்றியும் இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். வெகுநாட்களாகவே ஒரு முழு புத்தகமும் காதல் கவிதைகளை கொண்டிருக்க வேண்டும் என்னும் என் பெரும் கனவிற்கு நோசன் பிரஸ் பப்ளிகேஷன்ஸ் மிகப்பெரிய வரப்பிரசாதம் எனக்குத் தந்திருக்கிறது. இந்த கவிதை புத்தகத்திற்கு மதிப்பிற்குரிய வழக்கறிஞர் திரு ஜி காளிதாசன் ஐயா அவர்கள், மதிப்பிற்குரிய மற்றும் வணக்கத்திற்குரிய பேராசிரியர் முனைவர் திருச்சூர் அமல்ராஜ் ஐயா அவர்கள், இனிய நண்பர் திரு ஸ்டாலின் ஆரோக்கியராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கி என்னை பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்திற்கு பெரும் உதவியாகவும் வடிவமைப்பு மற்றும் தட்டச்சு பணிகளை மிக நேர்த்தியாக செய்து முடித்த என்னுடைய உதவியாளர் பாசத்திற்குரிய தம்பி பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். வாங்கிப் படியுங்கள் இந்த புத்தகத்தை காதல் கவிதைகளில் மழை உங்களையும் நனைக்கட்டும்.